அரசு பள்ளிகளில் குறையும் இடைநிற்றல்…, அறிவிப்பை வெளியிட்டு பெருமிதம் கொண்ட டெல்லி முதல்வர்!! 

0
அரசு பள்ளிகளில் குறையும் இடைநிற்றல்..., அறிவிப்பை வெளியிட்டு பெருமிதம் கொண்ட டெல்லி முதல்வர்!! 

ஒவ்வொரு மாநில அரசும், அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இலவச புத்தகம், சீருடை, உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளனர். குறிப்பாக, பல தனியார் பள்ளிகளுக்கு ஈடாக இணையவழி வகுப்புகளையும் அரசு பள்ளிகள் நடத்தி வருகின்றனர். மேலும், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்டவைகளில் மேம்பாடும் அடைந்துள்ளது.

இதனால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்நிலையில், டெல்லி மாநில முதல்வர் கேஜரிவால், அரசு பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளதாகவும், தற்போது சுமார் 18 லட்சம் மாணவர்கள் டெல்லி அரசு பள்ளிகளில் பயில்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 8 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை அரசு பள்ளிகள் கண்டுள்ளதாகவும் பெருமிதமாக கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களே இத மட்டும் செஞ்சிடாதிங்க…, மீறினால் ஒரு ஆண்டு சிறை…, கடுமையான விதி விதித்த கேரளா அரசு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here