எப்படிடா இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க….,மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்…,

0
எப்படிடா இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க....,மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்...,
எப்படிடா இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க....,மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்...,

உலகளவில் மிகவும் சந்தோஷமாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

சந்தோஷமான நாடு

இன்றைய அவசர உலகில் அனைவரும் எதற்காகவோ ஓடிக்கொண்டிருக்க, யாருக்கும் ஒரு இடத்தில் நின்று பேசுவதற்கோ, ரசிப்பதற்கோ நேரம் இருப்பதில்லை. இதில் எங்கே இருந்து சந்தோஷமாக இருக்க என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால், எப்போதுமே சந்தோஷமாக இருந்து உலகளவில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது பின்லாந்து.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தை பிடிப்பது இது 6 ஆவது முறையாகும். ஐநா சபையின் Sustainable Development Solutions Network அமைப்பு வெளியிட்ட இந்த அறிக்கையின்படி, பின்லாந்து மக்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வு, அந்நாட்டு மக்களின் வாழ்க்கை, வருமானம், சுகாதாரம், ஊழல் அளவு, மகிழ்ச்சி, சமூக ஆதரவு போன்ற விஷயங்களை உள்ளடக்கியது.

மார்ச் 31 ஆம் தேதி திரைக்கு வரும் ‘விடுதலை 1’…,அதிகாரப்பூர்வ அறிவிப்பு….,

இப்போது, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 136 ஆவது இடத்தை பெற்றுள்ளது. அதே நேரத்தில், டென்மார்க் இந்த வரிசையில் 2 ஆம் இடத்திலும், ஐஸ்லாந்து 3 ஆம் இடத்திலும், ஸ்விட்சர்லாந்து 4 ஆம் இடத்திலும், நெதர்லாந்து 5 ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here