பார்ட்டி மோடில் நடிகர் அஜித்….,மனைவி ஷாலினி வெளியிட்ட புகைப்படம்….,

0
பார்ட்டி மோடில் நடிகர் அஜித்....,மனைவி ஷாலினி வெளியிட்ட புகைப்படம்....,
பார்ட்டி மோடில் நடிகர் அஜித்....,மனைவி ஷாலினி வெளியிட்ட புகைப்படம்....,

நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சேர்ந்து விடுமுறையை உற்சாகமாக கழிக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கதாநாயகனாக அறிமுகமாகி, தமிழ் திரையுலக ரசிகர்களை தன் வசப்படுத்தி இருப்பதில் முக்கியமானவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை அடுத்து நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டிருந்த நிலையில் அந்த படம் டிராப் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக சில தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் சொல்லப்பட்டு வருகிறது.

எப்படிடா இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க….,மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடம்…,

இது குறித்து அஜித் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சேர்ந்து விடுமுறையை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here