திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை – வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!

0
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!
திருமணத்திற்கு தயாரான சூர்யா பட நடிகை - வருங்கால கணவர் போட்டோவுடன் வெளியான முக்கிய பதிவு!!

தமிழ் சினிமாவின், முன்னணி நடிகையான பூர்ணா பிரபல தொழிலதிபர் ஷனித் அசிப் என்பவரை, திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 திருமண அப்டேட்  :

தமிழில் கடந்த 2008ஆம் ஆண்டு நடிகர் பரத் நடிப்பில் வெளியான, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. சினிமாவிற்காக தனது பெயரை பூர்ணா என்று வைத்துக் கொண்ட அவரின், நிஜப் பெயர் ஷம்னா கசிம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கந்தகோட்டை, கொடிவீரன், அடங்க மறு, தகராறு, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், தனது திருமணம் குறித்து அதிரடி அப்டேட் ஒன்றை இவர் வெளியிட்டுள்ளார்.

அதாவது, தனது வருங்கால கணவர் ஜனித் ஆசிப், என்ற தொழிலதிபரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். அவரது போட்டோவுடன் கூடிய முக்கிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இவர்களது திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, ரசிகர்கள் பலரும் நடிகை பூர்ணாவுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here