
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவை கொலை செய்தது ஜீவானந்தம் தான் என அவரை போலீசார் கைது செய்கின்றனர். இன்னொரு பக்கம் அப்பத்தா இறந்த இடத்தை பார்த்து ஜனனி, சக்தி இருவரும் கதறுகின்றனர். இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜனனி அப்பத்தாவின் வளையல் மற்றும் சேலையை எடுத்துக்கொண்டு நந்தினி இடம் காண்பித்து அப்பத்தா இறந்துவிட்டார் என்று சொல்லி அழுகிறார்.. இதை பார்த்து விசாலாட்சியும் அழுகிறார்.

Enewz Tamil WhatsApp Channel
அப்போது கரிகாலன் விசாலாட்சியிடம் நாங்க மட்டும் வெளியே போல எல்லாரும் செத்துருப்போம் என்று சொல்லி புலம்ப உடனே சக்தி அதுதான உங்க பிளான். அப்பத்தாவை கொலை செய்ததே நீங்கதான் என்று சொல்கிறார். பின் ஈஸ்வரி விசாலாட்சியிடம் ஜீவானந்தத்தை கைது செஞ்சுட்டாங்க. இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்கிறார். உடனே விசாலாட்சி உங்களுக்கு ஜீவானந்தம் வசியம் வச்சுட்டான். அதான் எதுக்கு அவனுக்கு சப்போர்ட் பண்றீங்க என அசிங்கமாக பேச ஈஸ்வரி போதும் நிறுத்துங்க என்று எதிர்த்து பேசுகிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.