EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு.., ஆன்லைனில் KYC ஆவணங்களை பதிவு செய்வது எப்படி?? முழு விவரம் இதோ!!!

0
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு.., ஆன்லைனில் KYC ஆவணங்களை பதிவு செய்வது எப்படி?? முழு விவரம் இதோ!!!
வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய சேமிப்பு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இந்த EPFO அமைப்பு அவ்வப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமீபத்தில் இந்த அமைப்பின் சந்தாதாரர்கள் அனைவரும் e-KYC ஆவணங்களை இணைக்க வேண்டும் என அறிவிப்பை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஆன்லைனில் எப்படி பதிவேற்றம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
  • இந்த அமைப்பின் உறுப்பினர் முதலில் EPFO ன் அதிகாரப்பூர்வ போர்ட்டல் பக்கத்திற்கு சென்று, UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா ஆகியவற்றை உள்ளிடவும்.
  • அதன் பின் ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி சரிபார்க்கவும் “நிர்வகி” என்பதை கிளிக் செய்து “கூட்டு பிரகடனம்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • அதன் பின் தேவையான விவரங்களை பதிவிட்டு KYC என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அடுத்ததாக அந்த பக்கத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு ஆதார் சரிபார்ப்புக்கு ஒப்புதல் அளித்து Submit கொடுக்கவும்.
  • பின் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து “சமர்ப்பி” என்பதைக் கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here