தேர்வு இல்லாமலேயே ஓட்டுநர் உரிமம்.. டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!!

0

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி இனி அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி மையங்களில் பயிற்சியை முடித்தாலே டிரைவிங் லைசென்ஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றிருந்தாலும், RTO அதிகாரி முன்பு வாகனத்தை ஓட்டிக் காண்பித்தால் மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்களுக்கு, ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய விதிமுறைகள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் இருக்க வேண்டிய வசதிகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மத்திய அரசின் பயிற்சி மாயன்களுக்கு வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க “Simulator” என்ற மாதிரி வாகனங்கள் வைத்திருக்கவேண்டும். அதன் மூலம் பயிற்சி அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here