‘விஜய் எப்போவுமே இப்படி தான்’ – தளபதியை பற்றி மனம் திறக்கும் மாளவிகா மோகனன்!

0

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது விஜய் பற்றிய சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன்

ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைபடத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் மாளவிகா மோகனன். இரண்டாவது படமே பெரிய நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது நயன்தாராவையே பீட் செய்யும் அளவிற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார் மாளவிகா மோகனன்.

ஆரம்பக்கட்டத்திலேயே இவரது வளர்ச்சி இந்த அளவிற்கு இருப்பதை பார்த்து பல நடிகைகள் பொறாமையில் தான் உள்ளனர். இப்படி இருக்க தற்போது அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் இளைய தளபதி விஜய்யின் உதவும் குணம், நட்பு குறித்து அவரது ரசிகர்களை கவரும் வகையில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தளபதி விஜய் தொலைபேசியில் எப்பொழுது தொடர்புகொண்டு பேசினாலும் எடுத்து பேசுவாராம் . அவரிடமிருந்து ஒரு முறை கூட எதிர்மறையான எண்ணம் கருத்துக்கள் வராது. எப்போதும் பாசிட்டிவ் ஆக இருக்க விரும்புவார்.

மேலும் சுற்றியுள்ள நட்பு வட்டாரங்களுக்கு ஏதாவது உதவி என்றால் உடனே முதல் ஆளாக செய்பவர். அதே போல் “எனக்கும் எதாவது உதவி தேவைப்பட்டால் கண்டிப்பாக அவர் உதவி செய்வார் என்றும் ‘ அவரது உதவி மனப்பான்மையை பற்றி புகழ்ந்து கருத்து வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

                                      வாட்ஸ்ஆப் – Enewz Tamil வாட்ஸ்ஆப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here