பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட 72 குடும்பங்கள்..!

0

கொரோன தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வந்த நிலையில் இப்பொழுது கொரோனாவை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர் அரசு தரப்பில்,அனால் டெல்லியில் மீண்டும் ஒரு சம்பவம் டெல்லி பகுதியில் பீட்சா வாங்கி சாப்பிட்டவர்கள் நிலைமை இப்போது பரிதாபமாகியுள்ளது. பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரிடம் பீட்சா டெலிவரி பெற்ற 72 வீட்டுக்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா 

டெல்லி மால்வியா நகர் என்ற பகுதியில் பீட்சா டெலிவரி செய்து வந்தவர் பி எம் மிஸ்ரா. ஒரு பீட்சா நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார்.பி எம் மிஸ்ராக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இதுவரை பீட்சா டெலிவரி செய்த 72 வீடுகளில் உள்ள மக்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அம்மாவட்ட மாஜிஸ்திரேட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் டெலிவரி செய்தவருடன் பணிபுரிந்த 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கல் எங்கெல்லாம் பீட்சா டெலிவரி செய்தாரோ அந்த இடங்கள் அனைத்துமே சுகாதாரத் துறையினரால் டிரேஸ் செய்யப்பட்டன என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம்

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில், 2ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 23வது நாளாக இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி செல்கிறது.அதில் மகாராஷ்ட்ரா, டெல்லி, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,578 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாள் முதலே அங்கு உணவு டெலிவரிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

டெலிவரி செய்பவர்களுக்கு கட்டுப்பாடு

காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட அவர்களுக்கு வீடுகளுக்கே சென்று சப்ளை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பீட்சா டெலிவரி செய்யும் போது கையுறை, முக கவசம் போன்றவற்றை அணிந்து கொண்டு தான் அதைச் செய்யவேண்டும் என்று கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதை பின்பற்றி தான் மிஸ்ராவும் டெலிவரி செய்துள்ளார். எனவே அவரிடம் பீட்சா டெலிவரி பெற்றவர்கள் பலருக்கும் நோய் பரவுவதற்கான வாய்ப்பு குறைவுதான். இருப்பினும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்கிறது சுகாதாரத்துறை. ஊரடங்கு கால புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here