பீஸ்ஸாவை வீடுகளில் வழங்க முடிந்தால் ஏன் ரேஷன் பொருட்களை வழங்க முடியாது??? முதலமைச்சர் கேள்வி!!!

0

டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் பீஸ்ஸாவை வீடுகளில் வழங்க முடியும்போது ஏன் ரேஷன் பொருட்களை வழங்க முடியாது??? என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொதுமக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்க தங்கள் அரசு முயற்சித்து வருவதாகவும் ஆனால் அதற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். மத்திய அரசுடன் முரண்பட வேண்டாம் என்றே 5 முறை ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. வீடுகளில் ரேஷன் பொருட்களை வழங்கும் டெல்லி அரசாங்கத்தின் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது ஏன்? தேசிய நலன் கருதி இந்த திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில் பீட்சா, பர்கர் போன்றவற்றை வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யும் போது ரேஷன் பொருட்களை ஏன் வழங்கக்கூடாது என்று டெல்லி முதலவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here