மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைப்பு – நிதியமைச்சகம் அறிக்கை

0
Salary
Salary

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ. 15,000 கோடி ஒதுக்கீடு செய்து தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2021 வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பாதிக்கப்படும் ஊழியர்கள்:

2020 ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்திவைக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டாலும், அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்படுவதால் 2021 மார்ச் வரை 27 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும் எனவும் அது சமூகத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் மற்றும் ஏழைகளின் நலத்திட்டங்கள் மற்றும் கொரோனாவால் சுகாதாரத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here