CSK-வை வீழ்த்திய கொல்கத்தா அணிக்கு அபராதம்…, ஐபிஎல் நடத்தை விதியை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்!!

0
CSK-வை வீழ்த்திய கொல்கத்தா அணிக்கு அபராதம்..., ஐபிஎல் நடத்தை விதியை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்!!
CSK-வை வீழ்த்திய கொல்கத்தா அணிக்கு அபராதம்..., ஐபிஎல் நடத்தை விதியை மீறியதால் நிகழ்ந்த விபரீதம்!!

CSK அணிக்கு எதிரான போட்டியில் நடத்தை விதியை மீறியதற்காக கொல்கத்தா அணிக்கு, ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தனது சொந்த மண்ணில் கடைசி (13 வது) லீக் போட்டியை கொல்கத்தா (KKR) அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில், 144 ரன்களை சேஸிங் செய்த, கொல்கத்தா அணியில் நிதிஷ் ராணா (57*) மற்றும் ரிங்கு சிங் (54) என அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் CSK அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும், பிளே ஆஃப்புக்கான வாய்ப்பு மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பார்த்து தான் இருக்கும். இதற்கிடையில், கொல்கத்தா அணிக்கு CSK அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதியை மீறிய காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களே., மே 26ம் தேதிக்குள் பணி மாற்றம் செய்ய உத்தரவு., பகீர் தகவல்!!!

அதாவது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் கொல்கத்தா அணி பந்து வீச தவறியதால், குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றத்திற்காக, கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 24 லட்சமும், இம்பாக்ட் பிளேயர் உட்பட பிளேயிங் லெவன் வீரர்களுக்கு 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், பஞ்சாப் அணிக்கு எதிராக இதே தவறை கொல்கத்தா அணி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here