மதுரையில் கொரோனா விழிப்புணர்வு – பரோட்டா வடிவில் முக கவசம்..!

0

மதுரையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

மதுரையில் கொரோனா தீவிரம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சென்னைக்கு அடுத்து மதுரையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி பகுதி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் மட்டும் வருகிற 12ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..!

மதுரையில் இதுவரை கொரோனாவால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,160 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 86 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் மதுரை மாவட்டத்தில் பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

முக கவச வடிவில் பரோட்டா..!

இந்நிலையில் மதுரை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஓட்டல் ஒன்றில் முக கவச வடிவிலான பரோட்டாக்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

இதுபற்றி அந்த ஓட்டலின் மேலாளர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, பொதுமக்களிடையே முக கவசங்களை அணியவேண்டும் என்ற கவனம் இல்லை. அதனால் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முக கவச வடிவிலான பரோட்டாக்களை நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ளோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here