அச்சுறுத்தும் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்., அதிகரிக்கும் உயிர் பலி., மத்திய சுகாதார துறை முக்கிய அறிவிப்பு  

0
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்த WHO அமைப்பு உலக மக்களை தடுப்பூசி  செலுத்தி கொள்ளும் படி  கேட்டுக்கொண்டது. இதையடுத்து மக்கள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதன் மூலம் வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. ஆனால் கொரோனா வைரஸிலிருந்து உருமாற்றம் அடைந்த ஜேஎன் 1 என்ற வைரஸ் கடந்த சில மாதங்களாக மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் குறைந்த அளவில் இருந்த பாதிப்பு இம்மாதம் அதிகரித்துள்ளது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 133 பேருக்கு புதிய வகையான வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணி நேர நிலவரப்படி மட்டும் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் சேர்த்து இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த ஜேஎன் 1 வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்தே குணமடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து இதுவரை 4.4 கோடி மக்கள் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளதாக தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here