கொரோனா இறப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண படிவம் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!

0
கொரோனா இறப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண படிவம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!
கொரோனா இறப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண படிவம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் திருப்தி ஏற்படாவிட்டால், அதிகாரப்பூர்வ ஆவண படிவம் பெற்றுக்கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா பரவலால் பல மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தொற்றின் பரவலை தடுக்க மத்திய அரசால் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இரண்டு தவணையாக மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், மக்களின் உயிரை பாதுகாக்கவும், தொற்றின் பரவலை கட்டுப்படுத்தவும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனை அடுத்து மாநிலங்களின் தடுப்பூசி தேவையை பொறுத்து மத்திய அரசு தடுப்பூசி வழங்குதலை அதிகப்படுத்தி வருகிறது.

கொரோனா இறப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண படிவம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!
கொரோனா இறப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண படிவம் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!

இந்த நிலையில், இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் பல பேர் மருத்துவ சிகிச்சை பலன் தராமல் இறந்து போயினர். இந்த நபர்களுக்கான இறப்பு சான்றிதழலில், கொரோனாவால் உயிரிழந்தவர் என்று குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழில் தங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு மாற்று வழியை தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கொரோனா இறப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண படிவம் - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!
கொரோனா இறப்புகளுக்கு அதிகாரப்பூர்வ ஆவண படிவம் – பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!!

அதாவது, இந்த சான்றிதழில் திருப்தி இல்லாதவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் விண்ணப்பித்து, இதற்கென்று அமைக்கப்பட்டுள்ள குழுவினரின் பரிசீலனைக்கு பிறகு, கொரோனா இறப்பிற்கான அதிகாரப்பூர்வ ஆவண படிவம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் இந்த அறிவிப்பு பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here