டிக்டாக் செயலி தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் – காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் கருத்து..!

0

டிக்டாக் செயலி தடை விதிக்கப்பட்டதன் மூலம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மேற்கு வங்க திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார்.

சீன செயலிகளுக்கு தடை..!

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதியில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால் சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன ஆப்களை மொபைலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் எடுக்க பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் டிக்டாக், ஹலோ, ஷேர் இட் உட்பட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு கடந்த மாதம் 29ம் தேதி அதிரடியாக தடை விதித்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

டிக்டாக் குறித்து நுஸ்ரத் ஜஹான் கருத்து ..!

இது தொடர்பாக நுஸ்ரத் ஜஹான் கூறியதாவது, டிக்டாக் ஒரு பொழுதுபோக்கு பயன்பாடு இது மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தும் முடிவு. இதன் மூலம் எந்த விதமான யுக்திகள் உள்ளன? வேலை இல்லாமல் இருப்பவர்களின் நிலை என்ன? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் சந்தித்த பாதிப்பு போன்று இப்போதும் பாதிக்கப்படுவார்கள். தேச பாதுகாப்பு என்பதால் டிக்டாக்கை தடை செய்வதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த கேள்விகளுக்கு பதில் யார் கூறுவது என தெரிவித்துள்ளார்.

டிக்டாக் எனது ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் இணைவதற்கு வேறு எந்த சமூக ஊடக தளத்தையும் போலவே இருந்தது. இது தேசிய நலனில் இருந்தால் நான் தடைக்கு முற்றிலும் துணை நிற்கிறேன். ஆனால் சில சீன பயன்பாடுகளைத் தடை செய்வது என்பது மத்திய அரசின் கண் கழுவுதல் மற்றும் ஒரு திடீர் முடிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here