மதுரையில் மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு – முதல்வர் அறிவிப்பு!!

0

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சென்னையைப் போன்று தற்போது மதுரையிலும் கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக உள்ளது. எனவே ஜூலை 5ம் தேதி வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவை மேலும் 7 நாட்களுக்கு அதாவது ஜூலை 12 வரை நீட்டித்து முதல்வர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

madurai corona virus ward
Madurai corona virus ward

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடுகளுக்கே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் எனவும், அதனை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மதுரையில் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கட்டுப்படுத்த பகுதிகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை கிருமிநாசினி தெளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதிகளில் எவ்வித பணிகளுக்கும் அனுமதி கிடையாது. இந்த முழு ஊரடங்கின் பொழுது தீவிரமாக கண்காணிப்புகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரையில் இன்று 280 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதுவரை 8 பேர் உயிரிழந்து உள்ளது குறப்பிடத்தக்கது. பரவை பேரூராட்சி, மதுரை மேற்கு, கிழக்கு, மாநகராட்சி எல்லை மற்றும் திருப்பரங்குன்றம் என ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் இருந்த பகுதிகளில் 7 நாட்கள் மீண்டும் இது நீட்டிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here