பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – வாயிலும் மூக்கிலும் ரத்தம் சொட்ட இறந்த சோகம்!!

0
பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் - வாயிலும் மூக்கிலும் ரத்தம் சொட்ட இறந்த சோகம்!!

கோலிவுட் சினிமாவில், தமிழ் காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் லிட்டில் ஜான் என்பவர், தனது வீட்டில் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் இறந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் இறப்பு:

கோலிவுட் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர், தனசேகரன். லிட்டில் ஜான் என செல்லமாக அழைக்கப்படும் இவர் வடிவேலு உள்ளிட்ட பல காமெடி ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். மூன்றடி உயரம் மட்டுமே கொண்ட இவர், தனது நடிப்பால் பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார். கோவில் திருவிழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்த இவர், பள்ளிப்பாளையம் அருகே உள்ள மோடமங்கலம் என்ற கிராமத்தில் மாரியம்மன் கோயில் பண்டிகையில் கலந்து கொண்டார்.

அதன் பிறகு வீட்டில் வந்து தூங்கிய இவர் எழுந்திருக்கவே இல்லை. குடும்பத்தினர் சென்று பார்த்தபோது வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்த போது, அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தமிழ் காமெடி நடிகர் இறந்த இந்த சம்பவம், கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here