சென்னை வாழ் மக்களே., இன்று (பிப்.15) முதல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
சென்னை வாழ் மக்களே., இன்று (பிப்.15) முதல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சென்னை வாழ் மக்களே., இன்று (பிப்.15) முதல் மின்சார ரயில் சேவையில் மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சென்னையில் மின்சார ரயில் பயணத்தை மேற்கொள்ளும் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, தண்டவாளங்களில் பராமரிப்பு பணி அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி இருப்பதால் சென்னை சென்ட்ரல், பீச் ஆகிய வழித்தடங்களில் மின்சார ரயில் சேவை இன்று (பிப்.15) முதல் நாளை மறுநாள் (பிப்.17) வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்,

  • ஆவடி to சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 03.50 மற்றும் 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், வெள்ளி மற்றும் சனிக்கிழமை முழுவதும் ரத்து.
  • இதற்கு பதிலாக ஆவடி to சென்னை சென்ட்ரலுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அதிகாலை 4 மற்றும் 4.05 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
  • சென்னை பீச் to பட்டாபிராமுக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் மின்சார ரயில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • பட்டாபிராம் to சென்னை பீச்-க்கு இரவு 10.25 மணிக்கு செல்லும் மின்சார ரயில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆவடியுடன் நிறுத்தப்படும்.
  • பட்டாபிராம் to சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 3.20 மணிக்கு புறப்படும் ரயில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை முழுவதும் ரத்து.
  • அதற்கு பதிலாக பட்டாபிராம் to சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 03.50 மணிக்கு, வெள்ளி மற்றும் சனிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here