என்னது.., சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை எம்.ஜி.ஆர் தங்கையா.., யாருன்னு தெரியுமா?

0
என்னது.., சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை எம்.ஜி.ஆர் தங்கையா.., யாருன்னு தெரியுமா?
விஜய் டிவியில் வரும் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் பட்டையை கிளப்பி வருகிறது. இது மட்டுமல்லாமல் டிஆர்பியிலும் முன்னிலை வகித்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் ரோகினி எப்போதும் வசமாக சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு தான் அனைவரிடமும் நிலவுகிறது. இப்படி இருக்கும் சூழலில் இப்போது இந்த சீரியலில் நடிக்கும் முத்துவின் பாட்டி குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இதில் முத்துவின் பாட்டியாக நடிகை ரேவதி நடித்து வருகிறார்.
இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் மௌன ராகம் சீரியலில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி சின்னத்திரையில் நடிக்கும் ரேவதி ஒரு காலத்தில் வெள்ளி திரையிலும் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு தங்கையாக தனிப்பிறவி என்ற படத்தில் நடித்துள்ளார். இது தவிர பல படங்களில் நடித்துள்ளார். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பலரும் எம்ஜிஆர் தங்கையா நீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here