தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதாற்காக விடுத்த கோரிக்கைக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் உரிய பாதுகாப்பு அம்சங்களையும் மேற்கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கி உள்ளது.
முறையான வாக்காளர் பட்டியல்
தேர்தல் ஆணையம் மத்திய அரசிற்கு அனுப்பிய பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தெளிவான வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கு ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் ஆதார் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். தேர்தல் அலுவலர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களிடமோ அல்லது புதியதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோரிடமோ ஆதார் எண்ணை கேட்க வழிவகை செய்கிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |