ஆக்லாந்தில் ஆதிக்கம் செலுத்துமா இந்தியா – இன்று முதல் டி20 போட்டி

0
IND vs NZ T20i

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளடக்கிய தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

டி20 உலகக்கோப்பை முன்னோட்டம்

இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள நிலையில் அதற்காக இந்திய அணி அதிக டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்த தொடரிலும் சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்திய அணி பேட்டிங்..!

இந்திய அணியில் ஷிகர் தவான் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவர். அதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோஹ்லி, ஷ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே உள்ளிட்ட வீரர்கள் சிறப்பான முறையில் ஆடினால் வெற்றி நிச்சயம்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

பௌலிங் பவர்..!

இந்திய அணியின் பவுலிங்கைப் பொறுத்த வரை வேகப்பந்து வீச்சில் பும்ராஹ், நவதீப் சைனி மற்றும் முஹம்மது சமி ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். சுழற்பந்தில் குலதீப் யாதவ் பந்து வீச வாய்ப்புள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

நியூஸிலாந்து எப்படி..?

நியூஸிலாந்திடம் இதுவரை 4 டி20 தொடர்களில் விளையாடி உள்ள இந்திய அணி ஒன்றில் மற்றுமே இதுவரை வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து பேட்டிங்கில் அனுபவ ராஸ் டெய்லர், கப்டில், முன்ரோ, கிராண்ட்ஹோம் உள்ளிட்டோரும், பவுலிங்கில் சாண்ட்னர், சவுத்தி, சோதி உள்ளிட்டோர் அணிக்கு பலம் சேர்கின்றனர்.

India Vs New Zealand Series Squad Announced – Squad and Schedule

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here