ரத்த தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய பிரபல நடிகர் – ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து அசத்தல்!!

0
ரத்த தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய பிரபல நடிகர் - ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து அசத்தல்!!
ரத்த தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய பிரபல நடிகர் - ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து அசத்தல்!!

பிரபல பாலிவுட், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தான் ரத்த தானம் செய்த போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

 ரத்த தானம் செய்த பிரபலம் :

பாலிவுட் திரை உலகத்தில், முன்னணி பிரபலமாக வலம் வருபவர் நடிகர் ஹிருத்திக் ரோஷன். பியார் ஹே என்ற இந்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், இந்த படத்திற்காக பிலிம்பேர் அறிமுக நாயகன் என்ற விருதைப் பெற்றார்.

பாலிவுட் சினிமாவில் முக்கிய பிரபலமாக வலம் வரும் இவர், தற்போது விக்ரம் வேதா மற்றும் ஃபைட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர், World Random Act of Kindness என்ற தினத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்துள்ளார்.

அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, தனது ரசிகர்களையும் இரத்த தானம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனது ரத்தம் குரூப் பி நெகட்டிவ் என்றும், இது ஒரு அரிய வகை ரத்தம் என்றும் கேப்சனில் பதிவிட்டுள்ளார். நடிகரின் இந்த செயலை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here