மதுரை to சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் போடியிலிருந்து இயக்கம்? ரயில்வே அமைச்சருக்கு பரந்த கோரிக்கை!!!

0

நாடு முழுவதும் நகரங்கள் மட்டுமல்லாமல் முக்கிய கிராம பகுதிகளிலும் ரயில் போக்குவரத்து சேவையை வழங்க மத்திய ரயில்வேத்துறை பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுரை to போடி இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் அனைத்து நாட்களிலும் போடி to மதுரை முன்பதிவு இல்லா ரயில், வாரத்தில் 3 நாட்கள் சென்னைக்கு விரைவு ரயில் என 2 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்க தலைவர், மத்திய ரயில்வே அமைச்சருக்கு எழுதிய கோரிக்கை மனுவை, எம்.பி.ரவீந்திரநாத்-திடம் ஒப்படைத்துள்ளனர். அதில் “போடி, தேனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு பலரும் சென்று வருகின்றனர். இவர்களின் பயண நலன் கருதி மதுரை to கோவை விரைவு ரயில் மற்றும் மதுரை to சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸை போடியிலிருந்து இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தி உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழக மக்களே.,  இந்த நாளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.,  வானிலை மையம் எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here