5ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – முதல்வருக்கு தூக்கு தண்டனை விதிப்பு!!

0

பீகார் மாநிலத்தில் 5ம் வகுப்பு மாணவியை பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தற்போது பள்ளி முதல்வருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை விதித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை:

தற்போது நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் இந்த தவறுகள் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. இதன் மூலம் நம் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு கடுமையான தண்டனை இல்லை என்பது போல் தான் தெரிகிறது. இதேபோல் ஓர் கொடூரமான சம்பவம் தான் பீகாரில் நடந்திருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ஷெரிப் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்ற 5ம் வகுப்பு மாணவியை அந்த பள்ளி முதல்வர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் போக்ஸோ சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

நடிகர் அஜித்தின் அட்வைஸ் – ரசிகர்கள் கேட்பார்களா??

தற்போது அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. முடிவில் பள்ளியின் முதல்வருக்கு நீதிபதி தூக்கு தண்டனை விதிப்பதாக அறிவித்தார். மேலும் இதற்கு உதவி செய்த ஆசிரியர் அபிஷேக் குமாருக்கு ரூ.50 ஆயிரம் அபராதத்தையும் விதித்தார். தொடர்ந்து இதுபோல் சம்பவம் நடந்து வருவதால் மாணவிகளை வெளியே விடுவதற்கு கூட தற்போது பெற்றோர்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here