பாக்கியா குடும்பத்தை பழிவாங்க கோபியை பாடாய் படுத்தும் ராதிகா.., விறுவிறுப்புடன் பயணிக்கும் பாக்கியலட்சுமி!!

0
பாக்கியா குடும்பத்தை பழிவாங்க கோபியை பாடாய் படுத்தும் ராதிகா.., விறுவிறுப்புடன் பயணிக்கும் பாக்கியலட்சுமி!!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபியின் குடும்பத்தை பழி வாங்க வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார் .

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி ராதிகாவை திருமணம் செய்து life-ஐ ஹாப்பியா என்ஜாய் பண்ணலாம் என்று நினைத்து கொண்டு இருந்தார், இருப்பினும் அவருக்கு ஏழரை சனியாக ராதிகா மாறியுள்ளார். எதற்கு எடுத்தாலும் கோபப்பட்டு கோபியை டார்ச்சர் செய்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், செழியன் ஜெனி இருவரும் ஹோட்டலில் சாப்பாடு வாங்கி, தாங்கள் சமைத்ததாக கூறி, குடும்பத்தினர் அனைவருக்கும் பரிமாறுகின்றனர். இருப்பினும் பாக்கியா, எழிலுக்கு இது ஹோட்டலில் வாங்கிய சாப்பாடு என தெரியும்.

இருந்தாலும் வெளியில் சொல்லாமல் சாப்பாடு நல்லா இருக்கு என்று சொல்கின்றனர். மேலும் ஈஸ்வரி, இது நீ சமைச்ச மாறியே தெரியல, எனக்கு சந்தேகமா இருக்கு என்று கூறுகிறார். இதையடுத்து இனியா, எனக்கு என்னமோ ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா மாதிரியே இருக்கு என்று சொல்ல, அதற்கு ஜெனி நான் என்னமோ ஹோட்டலில் வாங்கிட்டு வந்த மாறி பேசுறீங்க என கேட்கிறார்.

அசிமிடம் வாயை கொடுத்த விக்ரமன்.., “ரவுண்டு” கட்டி வச்சு செய்யும் ஹவுஸ்மேட்ஸ்.., வெளியான ப்ரோமோ வீடியோ!!

இன்னொரு பக்கம், கோபி குளித்துவிட்டு துண்டு கேட்க ராதிகாவை அழைக்க ,ஆனால் அவருக்கு கோபி கூப்பிட்டது கேட்கவில்லை. ராதிகா கீழே அவர், அம்மா குழந்தை கூட பேசிக் கொண்டிருந்தார். இப்படி இருக்க கோபி, துண்டு தேடி பார்த்துவிட்டு வேட்டியை வைத்து துடைத்து கொள்கிறார். பின்னர் அவர் கீழே வர அப்போது ராதிகாவின் அம்மா, நானும் தாத்தாவும் குதிரையில் போனோம் என சொல்ல, கோபி யாரு தாத்தா என கேட்கிறார். அதற்கு சந்துரு என் அப்பா தான் என்று சொல்கிறார். அப்போது மயூ, ராதிகாவிடம் அம்மா நீங்க கொடைக்கானலில் குதிரையில் போனீங்களா என கேட்க, கோபி இவளுக்கு கொடைக்கானல் பத்தி பேசினாலே கோபம் வந்துருமே என நினைக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின், இவ்வளவு நேரம் ஆகியும் ஒரு காபி கூட இந்த வீட்ல கிடைக்கல என கோபி நினைக்க, அப்போது சந்துரு டீ கேட்கிறார். அந்த சமயம், ராதிகா அம்மா அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வருகிறார். ஆனால், கோபிக்கு டீ பிடிக்கத்தால், அவர் குடிக்கவில்லை. பின் ராதிகா ரூமுக்கு வர கோபி ஏன் என்கிட்ட சரியா பேச மாட்டிக்கிற என கேட்க உங்க குடும்பம் என்ன அசிங்கப்படுத்துனதுக்கு நான் எல்லாரையும் பழி வாங்க வேண்டும். நம்ம வாழ்ந்து காட்ட வேண்டும் என ராதிகா கத்துகிறார்.

இன்னொரு பக்கம் ஜெனி கொடைக்கானலில் கோபியை பார்த்தது பற்றி விசாரிக்க, பாக்கியா எனக்கு பழகிடுச்சு ஜெனி விடு என சொல்கிறார். பின் ஜெனி ஹோட்டலில் வாங்கிய சாப்பாடு உடைய கவர்களை பாக்கியா பார்க்க, அச்சச்சோ நாம மாட்டிகிட்டோம் என நினைக்கிறார் ஜெனி. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here