கண்ணம்மா பற்றிய ரகசியம் இது தான்.., அம்பலமான உண்மை.., பாரதி கண்ணம்மா அதிரடி ட்விஸ்ட்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இப்பொழுது கண்ணம்மா பாரதியின் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டார். பாரதி தனது அப்பாவின் நினைவிலேயே தனது வாழ்க்கையை அழித்து கொண்டிருக்க இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக திருந்தியுள்ளார். மேலும் குடிப்பழக்கத்தையும் மொத்தமாகவே விட்டு விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது கண்ணம்மாவிற்கு பாரதியின் அப்பா யார் என்றே தெரியாது. தெரியாமலே இந்த அளவிற்கு பாரதி மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருக்கிறார். உண்மை தெரிந்தால் என்னென்ன நடக்குமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

இப்படி இருக்க உண்மை தெரியும் தருணம் நெருங்கி விட்டது. அதாவது கண்ணம்மா ஒரு வேலை விஷயமாக பாரதியின் வீட்டிற்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்படுமாம். அப்பொழுது பாரதியின் அப்பா போட்டோவை பார்த்து ஷாக்காவாராம். இதற்கடுத்து நடக்க போகும் குழப்பத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here