மூன்றில் ஒரு பங்கு ஊழியருடன் மட்டுமே வங்கிகள் இயங்க அனுமதி !!!

0

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வங்கிகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியருடன் மட்டுமே வங்கிகள் இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றில் ஒரு பங்கு ஊழியருடன் வங்கிகள்:

இந்தியாவில் கொரோனா 2வது அலை தொற்றில் ஒரு நாளுக்கு பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வங்கிகளின் வேலை நேரம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையைப் பாதியாக குறைக்க இந்தியன் பேங்க் அசோசியேஷன் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த கால கட்டத்தில், வாடிக்கையாளர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதால், வங்கி வேலை நேரத்தைக் குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு வங்கியாளர் சங்கம்  கோரிக்கை விடுத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரையில் மட்டுமே இயங்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்தியன் பேங்க் அசோசியேஷன் வலியுறுத்தியுள்ளது. தற்போது நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை கருத்தில் கொண்டு வீட்டில் இருந்து பணியாற்ற  இயலும் ஊழியர்களுக்கு Work From Home அளிக்கவும், வங்கிகள் இயங்கும் நேரத்தைக் குறைக்கவும், ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்தவும் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here