வரலாறு காணாத அவலாஞ்சி உறைபனி., முடங்கிப்போன பொதுமக்கள்., பூஜ்யத்துக்கு சென்ற வெப்பநிலை!!

0
மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டியில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும். அதாவது ஆரம்பத்தில் நீர் பனி பொழிவில் தொடங்கி போக போக கடும் உறைபனிக்கு வாய்ப்புள்ளது. இப்படியான அசாதாரணமான சூழ்நிலையில் தற்போது அங்குள்ள பொதுமக்கள், சுற்றுலா  வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்படி இருக்கையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சியில் இன்று 0°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அங்குள்ள புல் வெளிகள், நீர்நிலைகள், சாலைகள் என அனைத்தும் கடும் பனியால் உறைந்து காணப்பட்டுள்ளது. இதுபோக உதகை தாவரவியல் பூங்காவில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் வரும் நாட்களில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here