கோவில்களில் வழங்கப்படும் ‘தோசை’ பிரசாதத்திற்கு பின் உள்ள ஆன்மீக உண்மைகள்!!

0

நாம் அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்ளும் தோசைக்கு பின் இவ்வளவு ஆன்மீக தகவல்கள் உள்ளதா?? முந்தைய காலங்களில் ஏதாவது பண்டிகை வந்தால் மட்டுமே வீட்டில் தோசை, இட்லி, பனியாரம் செய்வது வழக்கமாக இருந்தது. ஆடி மாதத்தில் வரக்கூடிய “ஆடிப்பெருக்கு” அதாவது ஆடி 18 அன்று வீட்டில் பலகாரம் செய்து கடவுளுக்கு நெவேத்தியம் படைப்பது வழக்கம். இந்த பலகாரத்திற்கு பின் இவ்வளவு உண்மைகள் மறைந்துள்ளதா என்பதைப் பற்றி பார்க்கலாம்.

தோசைக்கு பின் உள்ள ஆன்மீக உண்மைகள்:

கோவில்களில் ஏன் தோசையை பிரசாதமாக கொடுக்கிறார்கள் தெரியுமா? தோசைக்கு நாம் பயன்படுத்தும் பொருட்களில் நவ கிரகங்கள் அடங்கியுள்ளது. அதனால்தான், கோவில்களில் தோசை பிரசாதமாக வழங்கப்படுகிறது. தோசை மட்டுமின்றி கோவில்களில் வழங்கப்படும் ஒவ்வொரு பொருளிற்கும் ஒரு ஆன்மீக உண்மைகள் இருக்கிறது. தோசையில் என்ன என்ன நவகிரகங்கள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தோசையை சுட பயன்படும் அக்னி, சூரிய பகவானாகவும், தோசை செய்ய முக்கியமாக தேவைப்படும் அரிசியில் சந்திர பகவானும், உளுந்து ராகு, கேது வையும், சுவைக்காக சேர்க்கப்படும் வெந்தயம் புதன் பகவானையும், தோசை சுடுவதற்கு பயன்படும் கல் சனி பகவானையும், தோசையை உண்ண கூடிய ஆண் குரு பகவானையும், பெண் சுக்கிர பகவானையும், தோசையின் வட்ட வடிவம் பிரபஞ்சத்தையும் குறிக்கிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இது நமக்கு தெரியாத உண்மையாக இருக்கலாம். ஆனால், இன்றளவும் கூட பல கோவில்களில் தோசையை கடவுளுக்கு நெவேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. தோசை என்ற சொல் எப்படி தோன்றியது தெரியுமா, தேவநேய பாவனம் என்ற புலவர் ஒருவர், தோ + செய் = தோசை என்றானது என்று கூறியுள்ளார். அதாவது, கல்லில் தேய்த்து செய்யப்படுவதால் இப்பெயர் பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here