ஆசிய கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்…, வெளியான புள்ளிப் பட்டியல்!!

0
ஆசிய கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்..., வெளியான புள்ளிப் பட்டியல்!!
ஆசிய கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்..., வெளியான புள்ளிப் பட்டியல்!!

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குரூப் Aயில் இடம் பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளுக்கான லீக் சுற்றுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதில், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி தலா 3 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களை பிடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதனை தொடர்ந்து குரூப் Bயில் உள்ள, பங்களாதேஷ் அணி மட்டுமே 2 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், 1ல் வெற்றி, 1ல் தோல்வி என 2 புள்ளிகள் பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, இன்று ஆசிய கோப்பையின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி மோத இருக்கிறது. இந்த போட்டியின் முடிவில் எந்தெந்த அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதும் என தெரியவரும். தற்போது வரை, சூப்பர் 4 சுற்றில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கோப்பை 2023: கொட்டும் மழையின் நடுவே அதிரடி காட்டிய ரோஹித், சுப்மன் கில்…, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here