தமிழும் சரஸ்வதியும் சீரியல் இன்றைய எபிசோடில் கோதை சாமியிடம் எங்களுக்கு ஏன் இப்படி கஷ்டம் வருது என புலம்பி கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் குடும்பத்தார் அவரை சமாதானப் படுத்துகின்றனர். பின் சரஸ்வதி வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல கோதை வர மறுக்கிறார். அப்போது வசுந்தராவின் தம்பி ஆதியும் நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல நடேசன் அதெல்லாம் சரிப்பட்டு வராது என்கிறார். பின் சரஸ்வதி என்ன செய்வது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பி தமிழ், நமச்சியிடம் நடந்த விஷயத்தைச் சொல்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த தமிழ் சரஸ்வதி, நமச்சியை கோவிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு அர்ஜுன் வீட்டுக்கு செல்கிறார். அங்கு அர்ஜுனை அடி வெளுக்கிறார். அப்போது ராகினி தடுக்க அவரையும் எச்சரிக்கிறார். பின் அர்ஜுனிடம் இத்தனை நாள் உன்கிட்ட எதுக்கு வம்பு வச்சுக்கணும் தான் ஒதுங்கி இருந்தேன். ஆனா நீ என் குடும்பத்து மேல கைய வச்சிட்ட. இனி உனக்கு நான் தான் எமன். ஒவ்வொரு நாளும் எதுக்கு என் குடும்பத்து மேல கைய வச்சேன்னு நீ நெனச்சே சாகணும் என மிரட்டி விட்டு செல்கிறார். பின் கோவிலுக்கு வரும் தமிழ் தன் அம்மா அப்பாவின் நிலைமையை பார்த்து கண் கலங்குகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.