
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி நேற்று தனது 2 வது லீக் போட்டியில் நேபாளம் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியின் இடையிடையே மழை பெய்தாலும், முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய நேபாள அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 74* மற்றும் சுப்மன் கில் 67* அதிரடியாக விளையாடி 20.1 ஒவரில் 147 ரன்கள் குவித்திருந்தனர். இந்த நிலையில், மழை வெளுத்து வாங்க தொடங்கியதால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 20.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்ததன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம், புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்த இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.