தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. இதனால் தக்காளி வாங்கவே இல்லத்தரசிகள் பலரும் யோசித்தனர். ஆனால் இப்போது தமிழகத்தில் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை தாறுமாறாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் கடந்த மாதம் வரை 1/2 கிலோ தக்காளி வாங்குவதற்கே யோசித்த மக்கள் இப்போது 10 கிலோ 5 கிலோ என வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தக்காளி வரத்து அதிகமாக உள்ளதால் வியாபாரிகள் தெருக்களில் வண்டிகளில் வைத்து கூவி கூவி விற்று வருகின்றனர். மேலும் விலை போகாததால் ஆறு கிலோ தக்காளி வெறும் 100 ரூபாய் தான் என விலையை குறைத்து விற்று வருகின்றனர். தக்காளியை தொடர்ந்து தற்போது வெங்காயத்தின் விலையும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இனி உனக்கு நான் தான் எமன்.., அர்ஜுனை விளாசிய தமிழ்.., அதிரடியான கட்டத்துடன் தமிழும் சரஸ்வதியும்!!!