தன்னுடைய வளர்ப்பு நாய்க்காக ரூ. 42 கோடி செலவு செய்த அமெரிக்க நபர்…!

0

அமெரிக்கர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் ரூ. 42 கோடி செலவு செய்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

நாய்க்கு இருதய கட்டி..!

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மேக்நெய்ல் என்பவர் பிரபல கார் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் ரெட்ரீவர் ரக நாய் ஒன்றை பல ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் அந்த நாய்க்கு இருதயத்தில் கட்டி வளர்ந்திருந்ததோடு, ரத்த குழாய் புற்று நோயால் பாதிப்படைந்திருந்தது தெரிய வந்தது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் விஸ்கன்ஸின் கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கு பின் நாய் பூரண நலம் பெற்றது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

டாக்டர்களை கவுரவிப்பதற்காக..!

தன்னுடைய நாயை காப்பாற்றிய டாக்டர்களை கவுரவிக்கும் விதமாக சூப்பர் பவுல் கால்பந்தாட்ட போட்டியில், நாய்களுக்கான புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரூ 42 கோடி செலவில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். இவர் தனது செல்லப்பிராணியின் மீது வைத்துள்ள அளவற்ற அன்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

டேவிட் மேக்நெய்ல் இது குறித்து கூறிய போது, இந்த விளம்பரத்தின் மூலமாக விலங்குகள் நோய்க்கான ஆராய்ச்சிக்கு நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொள்கிறேன். விஸ்கான்ஸின் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மக்கள் நன்கொடை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here