இந்திய சாலைகளில் உருளப்போகும் அமேசான் எலக்ட்ரிக் டெலிவரி ரிக்க்ஷாக்கள் – ஜெஃப் பெசோஸ்

0
Amazon Jeff Bezos

அமேசான் இந்தியா கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவித்த நிறுவனத்தின் உலகளாவிய காலநிலை உறுதிமொழியின் (Climate Pledge) ஒரு பகுதியாக தனது மின்சார வாகன விநியோகத்தை நாட்டில் தொடங்கத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது ஜனவரி 20 திங்கள் முதல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் 10,000 அமேசான் எலக்ட்ரிக் டெலிவரி ரிக்க்ஷாக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

ஜெஃப் பெசோஸ் வெளியிட்டார்

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் திங்கள் கிழமை வெளியிட்ட ட்விட்டில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஜெஃப் பெசோஸ் அமேசான் எலக்ட்ரிக் டெலிவரி ரிக்க்ஷா ஓட்டும் காட்சியும் உள்ளது.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

10,000 மின்சார வாகனங்கள்

அமேசான் இந்தியா தனது மின்சார வாகன விநியோக ரிக்‌ஷாக்களை நாட்டின் 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் இயக்கவுள்ளது. மேலும் இதனை 2025ம் ஆண்டுக்குள் 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்


அகமதாபாத், பெங்களூரு, கோயம்புத்தூர், டெல்லி என்.சி.ஆர், ஹைதராபாத், நாக்பூர் மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய நகரங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளன. வாடிக்கையாளர் ஆர்டர்களின் நிலையான மற்றும் பாதுகாப்பான விநியோகங்களை உறுதி செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையை உருவாக்க அமேசான் இந்தியா செயல்பட்டு வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here