தொடர்ந்து நீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுக்கும் நடிகை மீரா மிதுன்., வலைவீசி தேடி வரும் போலீஸ்!!

0
தொடர்ந்து நீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுக்கும் நடிகை மீரா மிதுன்., வலைவீசி தேடி வரும் போலீஸ்!!
தொடர்ந்து நீதிமன்றத்திற்கு டிமிக்கி கொடுக்கும் நடிகை மீரா மிதுன்., வலைவீசி தேடி வரும் போலீஸ்!!

மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசிய வழக்கு இன்று நடைபெற்ற நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகியுள்ள அவரை தொடர்ந்து போலீஸ் தேடி வருகிறது.

நடிகை மீரா மிதுன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை மீரா மிதுன். அதுமட்டுமின்றி நடிகர் விஜய் தன்னுடைய மாமா என்று அவரை இழிவாக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவருடைய ரசிகர்கள் மீரா மிதுன் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து அண்மையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தவறான கருத்துக்களை கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்தனர். அதன் பின்னர் ஜாமீனில் இருவரும் வெளிவந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 15ம் தேதி விசாரணைக்கு வந்த போது நடிகை மீரா மிதுன் வராமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று இந்த விசாரணை தொடர்ந்தது.

அவர் வராததால் இந்த வழக்கை இன்று செப் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நடந்த விசாரணையிலும் நடிகை மீரா மிதுன் வராமல் தலைமறைவாகியுள்ளார். இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, அவர் தலைமறைவாக இருக்கும் அவரை கூடிய விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here