திருமணமானவருடன் உறவா?? டேட்டிங் செய்யும் கங்கனா., அவரே உண்மையை உடைத்த தருணம்!!!

0

பாலிவுட்  திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கங்கனா ரனாவத். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.  இதற்கிடையில் அரசியல் தலைவிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

அப்போது ‘ஈஸி மை டிரிப்’ இணை நிறுவனர் நிஷாந்த் பிட்டியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் நிஷாந்த் பிட்டியுடன் கங்கனா டேட் செய்து வருவதாக வதந்தியை பரப்பி வந்தனர். இதற்கு பதிலளித்த கங்கனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது  நிஷாந்த் பிட்டி திருமணமானவர், அவர் என்னுடன் வெறும் புகைப்படம் மட்டும் தான் எடுத்து கொண்டார். மேலும் நான் வேறொரு நபரை டேட் செய்து வருகிறேன். நேரம் வரும் போது நானே சொல்கிறேன். அதுவரை இல்லாத ஒன்றை இப்படி பரப்பாதீர்கள் என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here