விஜய்யின் அரசியல் கட்சி பெயரில் எழுந்த சர்ச்சை.. திருத்தம் செய்த தளபதி.. முழு விவரம் உள்ளே!!

0

தென்னிந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் தற்போது அவர் அரசியலில் கால் பதித்துள்ளார். அதோடு தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது கட்சியை தொடக்கியிருந்தார். மேலும் 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என அறிவித்திருந்தார்.

இப்படி இருக்க விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பெயரில் எழுத்துப்பிழை இருப்பதாக புகார் எழுந்திருந்தது. அதாவது வெற்றி என்ற வார்த்தையின் பின் ”க்” சேர்க்கும் படி மக்கள் பரிந்துரைத்து வந்த நிலையில் தற்போது அதை ஏற்று கொண்டு தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இத்தகவல் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here