சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ பட ரிலீஸ் தேதி இது தானாம்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் ‘அமரன்‘. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நடிகர் ராகுல் போஸ், புவன் அரோரா, ஷியாம் மோகன், லல்லு ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த மாதம் இப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமம் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வந்துள்ளது. அதாவது அமரன் திரைப்படம் வரும் ஜூலை மாதம் ரிலீசாக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை உறுதிப்படுத்தும் வகையில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here