பழம்பெரும் நடிகர் மதுரை மோகன் திடீர் மரணம்., அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!!

0
பழம்பெரும் நடிகர் மதுரை மோகன் திடீர் மரணம்., அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!!
தமிழ் சினிமாவில் எக்கசக்க திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் மதுரை மோகன். இவர் அஜித்தின் சிட்டிசன்  படத்தில் நடித்து அசத்தியிருந்தார். மேலும் விஷ்ணு விஷாலின் முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.
அதோடு இவர் சின்னத்திரையிலும்  பல சீரியல்களிலும் நடித்துள்ளார். இப்படி 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கலக்கி வந்த இவர் இன்று உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் பரவி வந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் தங்களின் ஆழந்த இரங்கலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here