உங்க ஆதார் கார்டு தொலைஞ்சுடுச்சா? உடனே நீங்க என்ன செய்யணும் தெரியுமா? முழு விவரங்கள் உள்ளே!!

0
உங்க ஆதார் கார்டு தொலைஞ்சுடுச்சா? உடனே நீங்க என்ன செய்யணும் தெரியுமா? முழு விவரங்கள் உள்ளே!!
உங்க ஆதார் கார்டு தொலைஞ்சுடுச்சா? உடனே நீங்க என்ன செய்யணும் தெரியுமா? முழு விவரங்கள் உள்ளே!!

ஆதார் கார்டு, தொலைந்து விட்டால் நீங்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும், அதற்கு மாற்றாக நகல் ஆதார் கார்டை எப்படி பெறுவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

எளிய வழிகள்:

இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும், 12 இலக்க தனித்துவம் மிக்க ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்த ஆதார் கார்டில் பயனர்களின் பயோமெட்ரிக், கண் கருவிழி என அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். இவ்வளவு விவரங்கள் நிரம்பிய, ஆதார் கார்டு தொலைந்து விட்டால், நீங்கள் அதற்கு மாற்றாக ஆதார் கார்டு நகலை எப்படி பிரிண்ட் எடுப்பது என்பதை இதில் காணலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்காக நீங்கள், https://resident.uidai.gov.in/find-uid-eid என்ற UAIDAI ன் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும். அங்கு “பதிவு எண்” அல்லது “ஆதார் எண்” என்பதை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், பாலினம், வயது மற்றும் முகவரி போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகு, OTP Send என்பதை கிளிக் செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை கவனமாக நிரப்ப வேண்டும்.

இப்போது நீங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை பெறுவீர்கள். இந்த நம்பரை, பெற்ற பிறகு https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளம் செல்லவும். அங்கு, கொடுக்கப்பட்டுள்ள பக்கத்தில் பதிவு எண், முழு பெயர், பின் நம்பர் போன்றவற்றை பதிவு செய்தால், மீண்டும் ஓடிபி சரிபார்ப்புக்கான உறுதிப்படுத்துதல் கேட்கப்படும். அதனை கிளிக் செய்து, ஓடிபி-யை உள்ளிட்டால் உங்கள் ஆதார் நகல் PDF வடிவில் உங்களுக்கு கிடைக்கும். இதை பிரிண்ட் அவுட் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here