ஜி.எஸ்.டி கவுன்சில் 44 வது கூட்டம் இன்று கூடுகிறது… கொரோனா தடுப்பு சாதனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுமா???

0

ஜி.எஸ்.டி எனப்படும்  சரக்கு மற்றும் சேவை வரிக்கான கவுன்சிலின் 44 வது  கூட்டம்  மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு சாதனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது போன்ற  முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 44வது கூட்டம் “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன்  தலைமை ஏற்க ,மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர், மாநில மற்றும் யூனியன்  பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் நிதித்துறை உயர் அதிகாரிகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கொரோனா சிகிச்சைக்கு மிக முக்கிய பொருட்களாக கருதப்படும்  மருத்துவ ஆக்சிஜன், கிருமிநாசினி, வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கு, ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிப்பது பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.மேலும் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரி குறைப்பது பற்றியும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. எனவே இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here