மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் உடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழ் சினிமாவில் 80களின் காலகட்டத்தில் மிகவும் முன்னணியில் இருந்தவர் தான் மறைந்த நடிகை ஶ்ரீதேவி. அழகு என்றாலே இவர் பெயரை தான் அந்த காலகட்டத்தில் உவமையாக சொல்வார்கள். அந்த அளவிற்கு அழகிலும் நடிப்பிலும் மக்களின் மனதில் ஒரு அங்கமாக மாறியவர். கமல்-ஶ்ரீதேவி,ரஜினி -ஶ்ரீதேவி என இந்த ஜோடிகள் அந்த காலத்தில் புகழ் பெற்றவை. இதையடுத்து இவருக்கு போனி கபூர் உடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.
நடிகை ஶ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக இணைய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் ஜூனியர் என்.டி.ஆர் , ராஜமௌலி இயக்கிவரும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் தவிர ராம்சரண் நடித்து உள்ளார். எனவே இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.ஆர்.ஆர் அடுத்து ஜூனியர் என்.டி.ஆர்,கே ஜி எஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. கூடிய விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம்.
Facebook =>Like செய்ய கிளிக் பண்ணுங்க!!