இ-பதிவு செய்ய குவிந்த மக்கள்– முடங்கியது இணையதளம்!!!!

0

தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்து நிலையில்; மக்கள் அனைவரும் இ-பதிவு செய்ய குவிந்ததால் இணையதளம் செயலிழந்து போனது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

முடங்கியது இணையதளம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் உடன் அறிவிக்ப்பட்ட ஊரடங்கு ஜூன் 14வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டதால், மக்கள் அனைவரும் அதிக அளவில் பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. சுயதொழில் செய்வோர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்து வருவதால் இபதிவு இணையதளம் முடங்கியது. வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம் என்று அறிவித்ததால் மேலும் சர்வர் டவுனானது.

அதன்படி சுயதொழில் செய்வோர் கடைகளை திறக்கவும், வெளி இடங்களுக்கு வேலைக்கு செல்லவும் இ-பதிவில் பதிவு செய்துகொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரீசியன், ப்ளம்பர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர் இ-பதிவு செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here