ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) சவாய் மான்சிங் மைதானத்தில் 24 வது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர். சொந்த ஊரில் எப்படியாவது வெற்றியை தட்டி தூக்க ராஜஸ்தான் அணி முழு வீச்சுடன் தயாராகி வருகிறது.
Vacation மோடில் எதிர்நீச்சல் நடிகைகள்.. எங்க போய் இருக்காங்கன்னு பாருங்க!!
அதே போல கடந்த முறை தோல்வியை தழுவிய குஜராத் டைட்டன்ஸ் அணி, இந்த முறை 3 வது வெற்றியை அடைய வேண்டும் என தயாராகி வருகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ள நிலையில், அதில் குஜராத் அணி 4 முறை வெற்றி அடைந்து இருக்கிறது. அதனால் இந்த முறை குஜராத் அணிக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது.