சர்வதேச இந்திய அணியானது, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் T20 தொடர் நிறைவடைந்து உள்ள நிலையில், அடுத்தாக ஒருநாள் தொடர் வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரார் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது கணுக்கால் காயம் காரணமாக முகமது ஷமி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. ஒரு வேளை இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடியாக அமையலாம் என்று முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.