உலக அளவில் உள்ள கால்பந்து வீரர்கள், UEFA, ஐரோப்பிய, சவுதி அரேபியா உள்ளிட்ட பல சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் விளையாடி பல தனித்துவ சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்நிலையில், ஒட்டுமொத்தமாக அதிக சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடிய டாப் 5 வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த பட்டியலில், கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டியானோ ரொனால்டோ 183 போட்டிகளுடன் முதலிடத்திலும், ஸ்பெயினின் இகர் கேசிலாஸ் 177 போட்டிகள் மற்றும் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 163 போட்டிகள் என 2வது மற்றும் 3வது இடத்தைத் பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, பிரெஞ்சின் கரீம் பென்சிமா 152 போட்டிகளுடன் 4 வது இடத்தையும், ஸ்பானிஸின் சேவி 151 போட்டிகளுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.