என்எல்சி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு – பொதுமேலாளர் சஸ்பெண்ட்!!

0

நெய்வேலி நிலக்கரி சுரங்க அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனல்மின் நிலைய விபத்து:

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள பாய்லர் (கொதிகலன்) வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பாய்லரை ஒழுங்காக பராமரிக்காததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புத் துறை விரைந்து சென்றது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தது. அதில் 6 பேர் உயிரிழந்த நிலையிலும், 15 பேர் காயத்துடனும் மீட்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்து உள்ளதால் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Accident
Accident

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி தயார் – 300 பேருக்கு பரிசோதனை!!

காயமடைந்த அனைவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை மோசமாக உள்ள காரணத்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பாய்லரை ஒழுங்காக பராமரிக்காத காரணத்தால் தான் விபத்து ஏற்பட்டது என்பதால் பொதுமேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண உதவியை முதல்வர் அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here