நியூசிலாந்து அணியை, அசத்தலான பந்து வீச்சால் இந்திய அணி 108 ரன்களுக்குள் சுருட்டி உள்ளது.
IND vs NZ:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே களமிறங்கினர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த போட்டியில், இந்திய அணியின் பவுலர்கள் தங்களது அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தி எதிரணியை மிரள வைத்து உள்ளனர். இதில், முகமது ஷமியின் அதிரடியான வேகத்தால், ஃபின் ஆலன்(0), டேரில் மிட்செல் (1), மைக்கேல் பிரேஸ்வெல் (22) விக்கெட்டை இழந்தனர். இவர்களை தொடர்ந்து, ஹென்றி நிக்கோல்ஸ் (2), டாம் லாதம் (1) என வரிசையாக பெவிலியன் திரும்ப, 18.3 ஓவரிலேயே நியூசிலாந்து அணி 56 ரன்னில் 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.
கே எல் ராகுல்-அதியா ஷெட்டி திருமண நியூ அப்டேட்…, விருந்தினர்கள் மொபைல் கொண்டு வர அனுமதி இல்லையா??
க்ளென் பிலிப்ஸ் (36) மற்றும் மிட்செல் சான்ட்னர் (27) சிறிது நேரம் நிலைத்து நின்று, அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தனர். ஆனால், இவர்களும் இந்திய பவுலர்களிடம் விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து அணி 34.3 ஓவரிலேயே 108 ரன்களுக்குள் சுருண்டது. இந்த போட்டியில், இந்திய சார்பாக, முகமது ஷமி (3), ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்களையும், சிராஜ், தாக்கூர் மற்றும் குலதீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.